இசையமைப்பாளர் டி .இமான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் ?

- in சினிமா
70
Comments Off on இசையமைப்பாளர் டி .இமான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் ?
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இயக்குனர் எழில் இயக்கும் அடுத்த படத்தில் ஹிரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். இவருக்கு மைனா படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து, அவர் முன்னனி கதாநாயகர்கள் படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்தார். விஜய்யின் ஜில்லா படத்துக்கு இசையமைத்தார். தற்போது விஸ்வாசம் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து மிகவும் ஸ்லீம்மாக மாறினார். இதனால் இவர் சினிமாவில் ஹிரோவாக நடிக்க போகிறார் என்ற செய்திகள் வெளியாகின.

i
இந்த நிலையில் இயக்குனர் எழில் ஜகஜால கில்லாடி படத்தை இயக்கியதை அடுத்து இமானை ஹிரோவாக வைத்து படம் இயக்க போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. எழில் இயக்கிய மைனா, கும்கி, சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி