ஆற்றை கடக்க இந்த மக்கள் செய்யும் வேலையை பாருங்களேன்.. திகிலான வீடியோ!

- in பல்சுவை
235
Comments Off on ஆற்றை கடக்க இந்த மக்கள் செய்யும் வேலையை பாருங்களேன்.. திகிலான வீடியோ!

பாலம் இல்லாததால் ஆற்றை கடக்க கிராம மக்கள் தினமும் கயிற்றின் மீது உயிரை பணயம் வைத்து நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மசெனார் கிராமத்தில் ஆறு ஒன்று அமைந்துள்ளது.

ஆனால், ஆற்றின் மேல் பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பக்கத்து ஊர்களுக்கு செல்ல கயிற்றின் மூலம் ஆற்றைக் கடந்து பல வருடங்களாக சென்று வருகின்றனர்.

பெண்கள் பாரமான பொருட்களை தூக்கிக்கொண்டு இந்த கயிற்றில் ஆற்றைக் கடக்கின்றனர்.

இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை உயிரை பணயம் வைத்தே ஆற்றை கடக்கிறார்கள்.

இந்த ஆபத்தான பயணம் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை

முறையிட்டும் பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.