ஆர்.கே.நகரில் ரூ.20 நோட்டை காட்டி ரூ.10 ஆயிரம் எங்கே? என டி.டி.வி.தினகரனை முற்றுகையிட்ட மக்கள்!

- in ஸ்மைல் ப்ளீஸ்
118
Comments Off on ஆர்.கே.நகரில் ரூ.20 நோட்டை காட்டி ரூ.10 ஆயிரம் எங்கே? என டி.டி.வி.தினகரனை முற்றுகையிட்ட மக்கள்!
பெரம்பூர்,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
தேர்தலின்போது 20 ரூபாய் நோட்டை டோக்கன் போன்று கொடுத்து பணம் விநியோகிப்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்தது.  ரூ.20 யை கொடுத்து, அதில் பாகம் எண், வாக்காளர் எண் குறிப்பிட்டு எழுதி, குறிபிட்ட புறநகர்ப் பகுதியில் அந்த 20 ரூபாயை கொடுத்து ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டதாக ஆர்.கே.நகரில் மற்ற கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் தரப்பிலும் ஆர்.கே.நகரில் 450 பேருக்கு தினகரன் ஆதரவாளர்கள் 20 ரூபாய் நோட்டு கொடுத்ததற்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்ற பிறகு கூறியதுபோல் மக்களுக்கு பணம் வந்துசேரவில்லை. ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி ரூ.20 டோக்கனை வாங்கி கொண்டு அல்வா கொடுத்த சம்பவமும் நேரிட்டது
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கவும், கோவில் விழாவில் கலந்துகொள்ளவும் டி.டி.வி.தினகரன் வந்தார். இந்த தகவலை அறிந்த தொகுதி மக்கள் 200–க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவில் முன்பு திரண்டு தினகரனை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தேர்தலின்போது கூறியதுபோல் ‘20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் ரூபாய் எங்கே?’ என்று 20 ரூபாய் நோட்டை காண்பித்து கோ‌ஷம் போட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியினரை போலீசார் வேறு வழியில் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். காசிமேடு பகுதியில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்த பின்னர் தினகரன் பேசுகையில் ‘‘20 ரூபாய் நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மதுசூதனன் கையாள் ராஜேஷ் எற்பாடு செய்தவர்கள். அவர்களின் தோல்வியை மறைக்கவும், மக்களை கேவலப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். நாங்கள் பணம் தருவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை, 20 ரூபாய் நோட்டும் தரவில்லை. இதுகுறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் பதிலடி கொடுக்க நேரிடும்’’ என்றார்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.