ஆப்பிள் அதிரடி: ரூ.25,000/-க்குள் விலை; 3.5மிமீ ஹெட்ஜாக்; ஆடிப்போனது ஸ்மார்ட்போன் உலகம்.!

- in தொழில்நுட்பம்
208
Comments Off on ஆப்பிள் அதிரடி: ரூ.25,000/-க்குள் விலை; 3.5மிமீ ஹெட்ஜாக்; ஆடிப்போனது ஸ்மார்ட்போன் உலகம்.!

கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது, உலகின் மிக மதிப்பு வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒரு வெற்றிகரமான தயாரிப்பு ஆகும். ஆப்பிள் ஐபோன் 6எஸ்-ன் அறிமுகத்திற்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஆனது ஐபோன் 6 எஸ் போன்றே சில வன்பொருள் அம்சங்களை கொண்டிருந்தது.

அதே சமயம் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு ஐபோனாகவும் திகழ்ந்தது. குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாள் தொடங்கி இந்தியர்களுக்கான, மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு ஐபோனாகவே மாறிவிட்டது, இந்த ஐபோன் எஸ்இ.! அத்தோடு நின்று விடாமல் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் தொடரின் வேர் வரை சென்று பார்த்துவிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து விட்டது போலும்.

ஆம் உங்களின் கணிப்பு சரியாக இருந்தால், விரைவில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் வெளியாகும் மற்றும் அது வழக்கம் போல இந்தியாவில் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2.! ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 என்கிற பெயர் கொண்டு வெளியான சமீபத்திய லீக்ஸ் வீடியோவின் வழியாக வரப்போகும் அடுத்த வெர்ஷன் பற்றிய சில விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

சீன வலைத்தளமான miaopai.com-ன் வழியாக வெளியான வீடியோவானது, ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனை போன்றவொரு வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. பின்பக்கத்தில் கண்ணாடி வடிவமைப்பு.! எனினும், சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அதாவது ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள வயர்லெஸ் சார்ஜ் அம்சம் ஐபோன் எஸ்இ 2-வில் இடம்பெறும் என்று தோன்றுகிறது. அதை உறுதி செய்யும் வண்ணம் ஐபோன் எஸ்இ 2-வின் பின்பக்கத்தில் கண்ணாடி வடிவமைப்பு உள்ளது.

இந்த முடிவானது மிகவும் கர்வம் மிக்க ஒரு முடிவாகும்..! எல்லாவற்றையும் விட சுவாரஸ்யமாக, ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனின் லைட்னிங் போர்ட் உடன் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஒன்று காணப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 7-ல் து தொடங்கி வெளியான ஒவ்வொரு ஆப்பிள் ஐபோனிலும் ஹெட்ஜாக் நீக்கப்பட்டு, பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் இந்நிலைப்பாட்டில், ஆப்பிள் எடுத்துள்ள இந்த முடிவானது மிகவும் கர்வம் மிக்க ஒரு முடிவாகும்.

ரூ. 20,000 க்கும் குறைவாக.! ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டால், இதர ஸ்மார்ட்போன்களில் இருக்கும் 3.5 மிமீ ஹெட்ஜாக் அம்சமானது ஆனது மெல்ல மெல்ல காணாமல் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்பது போல் தெரிகிறது. ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆனது தொடர்ந்து வளரும் சந்தைகளில், அதன் விற்பனையை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தயாரிப்பை சந்திக்கும் காரணத்தினால் ஐபோன் எஸ்இ மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. பெரிய இ-காமர்ஸ் போர்ட்டல்களில் நடக்கும் விற்பனை மற்றும் சலுகைகளின் போது, ஐபோன் எஸ்இ ஆனது ரூ.20,000 க்கும் குறைவாக வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய வடிவமைப்பில் பெரிய பெரிய அம்சங்கள்.! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த ஆப்பிள் ஐபோன் எஸ்இஸ்மார்ட்போனில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரே வன்பொருள் மாற்றம் அதன் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்கக சேமிப்பு மாடல் மட்டும் தான். அடுத்து வரப்போகும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 ஆனது, ளை கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4 முதல் ஜூன் 8-க்குள் வெளியாகலாம்.! முன்னதாக வெளியான தகவலின்படி, வருகிற ஜூன் மாதம் நடக்கும் WWDC 2018 நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம்.

அறியாதோர்களுக்கு, WWDC 2018 நிகழ்வானது வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடைபெறும். சீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்று பரிந்துரைத்துள்ளன.

How to check PF Balance in online (TAMIL) மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும்.? அதை உறுதியாக்கும் வண்ணம், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? ஆப்பிள் வழக்கமாக வெவ்வேறு பிராந்திய மாறுபாட்டிற்கான தனித்துவமான மாடலை பயன்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன. அப்படியாக வெளியாகும் ஐபோன் எஸ்இ 20-யின் அம்சங்கள் என்னவாக இருக்கும்.? மிக முக்கியமாக இந்திய விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.? மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் தான் வெளியாகும்.! கூறப்படும் ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.

Read more at: https://tamil.gizbot.com/mobile/apple-iphone-se-2-shows-3-5-mm-jack-glass-back-purported-leaked-images/articlecontent-pf132849-017575.html?c=hgizbot

Facebook Comments

You may also like

ட்ரெண்டிங் செக்ஷனை நீக்குகிறது பேஸ்புக் !

பேஸ்புக் தளத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிரென்டிங் செக்‌ஷென்