ஆன்மிக மகத்துவமும் மருத்துவமும் நிறைந்த துளசி செடி….!

- in மருத்துவம்
119
Comments Off on ஆன்மிக மகத்துவமும் மருத்துவமும் நிறைந்த துளசி செடி….!
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில்  முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.
எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும்  தொலையும்.
யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.
துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.

 

Facebook Comments

You may also like

இயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …!

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத