ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை: காங்., தேர்தல் வாக்குறுதி

- in ஸ்மைல் ப்ளீஸ்
85
Comments Off on ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை: காங்., தேர்தல் வாக்குறுதி

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம், 12ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
காங்., மற்றும், பா.ஜ., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மங்களூரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான, காங்., தேர்தல் அறிக்கையை, கட்சி தலைவர் ராகுல் வெளியிட்டு பேசியதாவது:பா.ஜ., தேர்தல் அறிக்கை, அதன் தலைவர்களால் தயாரிக்கப்படுகிறது. காங்., கட்சியின் தேர்தல் அறிக்கையில், மக்களின் குரல் எதிரொலிக்கும். 2013 தேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கர்நாடகாவில், ஒரு கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

முக்கிய அம்சங்கள்:

*விவசாயிகள் நலனுக்கு ஆணையம் அமைக்கப்படும்
*அனைவருக்கும் இலவச கல்வி
*லோக் ஆயுக்தா உரிமைகள் மீட்கப்படும்
*ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்
*அனைத்து கிராமப்புற பஞ்சாயத்துகளிலும், ‘வை – பை’ இணைப்பு வழங்கப்படும்
*அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசு மற்றும் தனியார் துறைகளில், ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
*கல்லுாரி மாணவர்களுக்கு, ‘ஸ்மார்ட் போன்’ வழங்கப்படும்
*அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பில், திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்
*வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு, நியாய விலை கடை மூலம், இலவச, ‘சானிட்டரி நாப்கின்’ வழங்கப்படுவதுடன், நாப்கின் மீதான வரி நீக்கப்படும்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.