ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

- in டாப் நியூஸ்
86
Comments Off on ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

ஜோத்பூர்: சாமியார் ஆசாராமுக்கு பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கயிருப்பதையொட்டி 3 மாநிலங்களின் பாதுகாப்பை பலத்தப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு,75, 2013-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த உ.பி.யைச் சர்ந்த இளம் பெண், சாமியார் மீது பலாத்கார குற்றச்சாட்டினை சுமத்தினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போன்று குஜராத்தில் உள்ள ஆசாராம்பாபு ஆசிரமத்தில் இரு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசாராம் பாபு, இவரது மகன் நாராயணன்சாய் ஆகிய இருவர் மீதும் போலீசில் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் இரு வழக்குகளிலும் ஜாமின் கோரி சாமியார் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. தற்போது ஜோத்பூர் மத்திய சிறையில் உள்ளார். ஜோத்பூரில் நடந்து வரும் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு நாளை (ஏப் 25-ம் தேதி) வெளியாகிறது.குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் சாமியாருக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
பஞ்சாபில் பலாத்கார வழக்கில் சிக்கிய சாமியார் குர்மீத் ராம்ரஹீம் மீதான தீர்ப்புக்கு முன்னரே அவரது ஆதரவளாளர்கள் வன்முறையில் இறங்கினர். எனவே சாமியார் ஆசாராமுக்கு குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பெருமளவு ஆதரவாளர்கள் உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பை பலத்தப்படுத்திட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்