ஆசாராம் குற்றவாளி : கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள்

- in டாப் நியூஸ்
111
Comments Off on ஆசாராம் குற்றவாளி : கண்ணீர் விட்டு கதறும் ஆதரவாளர்கள்

புதுடில்லி : 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார். அவருக்கான தண்டனை விபரம் குறித்து வாதம் நடைபெற்று வருகிறது.

ஆசாராமிற்கு அதிகபட்சம் தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. அதே சமயம், ஆசாராமின் வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என ஆசாராம் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், சமூர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர்.

ஆனால், ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். முன்னதாக இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஆசாராமிற்கு சாதகமாக வர வேண்டும் என ஆமதாபாத் உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களில், ஆதரவாளர்கள் பலர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்