ஆங்கில புத்தாண்டு என்றாலே இதே வேலையா போச்சு.. சீறுகிறார் எச் ராஜா!

- in டாப் நியூஸ்
112
Comments Off on ஆங்கில புத்தாண்டு என்றாலே இதே வேலையா போச்சு.. சீறுகிறார் எச் ராஜா!

சென்னை: ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்திவிட்டு கலாட்டா செய்வது சகஜாமாகிவிட்டது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

நாளை நள்ளிரவுடன் 2017ஆம் ஆண்டு விடைபெற்று 2018 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. சென்னை உட்பட நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் என பல இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு களைகட்டும். கோவில்களிலும் இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

 • ஆங்கில புத்தாண்டு என்றாலே

  குடித்துவிட்டு கலாட்டா..

  இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு குறித்து எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் குடித்துவிட்டு வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகிவிட்டது என அவர் கூறியுள்ளார்.

 • இரவு 1 மணிக்கு மேல்..

  காவல்துறை தடை

  இதனால்தான் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் யாரும் புத்தாண்டு கொண்டாடக் கூடாது என காவல்துறை தடைவிதித்துள்ளது என்றும் அவர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

 • கோவில்களை திறப்பது

  மேலும் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பது ஆகம விதி மீறல் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

 • பலரும் எதிர்ப்பு

  எச் ராஜாவின் இந்த டிவிட்டுக்கு பலரும் அவரது பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வழக்கமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பிரச்சனையில் சிக்கும் எச் ராஜா இம்முறை ஆங்கில புத்தாண்டை வம்பிழுத்துள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்