அவருடைய விந்து உள்ளே சென்ற பின் வழிகின்றது அது ஏன்?

- in அந்தரங்கம்
1434
Comments Off on அவருடைய விந்து உள்ளே சென்ற பின் வழிகின்றது அது ஏன்?

கேள்வி-

நாங்கள் திருமணமாகி ஒரு மதம் நிறைவு பெறுகின்றது.திருமணம் ஆகி இருவரும் பதுன்மூன்று நாள் ஒன்றாக இருந்தோம்.பின் அவர் வெளி நாடு திரும்பிவிட்டார்.விரைவில் நான் சென்று விடுவேன் அவரிடம்.திருமணத்தின் பின் நாம் கலவியில் 5-6 தடைவை ஈடுபட்டோம்.

தொடர்ச்சியாக இல்லை.எனது மாதவிலக்கு தொடக்கி இருபதாம் நாள் தான் நம் கலவியில் என் கன்னி சவ்வு கிழிந்து இரதம் போதுமான அளவு வெளியேறியது.சிறிது நேரத்தில் நான் மயக்கம் அடைந்து விட்டேன் .இரதம் வெளியேறினால் இப்படி நிகழும் என நினைகின்றேன் .நான் ஒரு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவி. 5 நிமிடத்தின் பின் எழுந்து களைப்பை உணர்ந்தேன்.என் யோனி கடும் விரைப்பை உணர்ந்தது.

இரண்டு நாள் கழிய உடல் சாதாரனமாகியது. அவருக்கு குழந்தை பெறுவதில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கின்றார்.அவருடைய விந்து உள்ளே சென்று பொன் வேறே வழிகின்றது.அது ஏன்?வித்து உள்ளே சென்று திரும்பி வெளிவந்தால் எப்படி கருகட்டல் நிகழும்? எனது மாதவிடாய் நாளும் வந்தது.அதனால் நாம் கலவியில் எடுபட முடியவில்லை.

இருப்பினும் நாம் கலவியில் ஈடு பட்டு விந்தை உட்செலுத்தியும் பின் சூடான விந்து யோனி வழி வெளிவந்து விடுவதால், எவ்வாறு நாம் குழந்தை பேருக்கான கலவியில் ஈடுபடுவது? அதற்கான வழிவகைகளை தங்களால் எமக்கு தர முடியுமா?

எனது நண்பி ஒருத்தி கூறினால் ” விந்து உட்சென்றவுடன் காலை மேலாக துக்கி நிறுத்திவைக்கும் படி.இலையேல் உட்சென்ற வித்து வெளிவரும் என்று. எனது குழப்பத்தை நீக்கி உங்களது அறிவுரைகளை தந்து உதவுமாறு கேட்கின்றேன்.

பதில் –

உங்கள் கேள்வியை படிந்தேன். கன்னி மென்சவ்வு கிழிந்ததினால் உங்களுக்கு மயக்கம் வந்தது என்று சொல்ல முடியாது. உடலுறவு கொண்டால் அதன் பின்பு உடற்சோர்வு அடிவயிறு சற்று நோவு, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு அடிப்படையாகவே இருக்கும்.கருக்கட்டலுக்கு ஏற்ற நாட்கள் மாதவிலக்கு வந்ததிலிருந்து 13ம் 14ம் நாட்கள் மற்றை நாட்களை விட இந்த நாட்களில் 90வீதம் அதிகம் காரணம் அந்த நாட்களிளேயே முட்டை வெளிவிடப்படுகிறது.

உங்கள் கணவரின் விந்து வெளியில் வருவதால் ஒரு பிரச்சினையும் இல்லை ஒரு கரு உண்டாவதற்கு ஆணின் ஒரு உயிர் அணுவே போதுமானது. ஒரு துளி விந்தில் உள்ள உயிர் அணு மில்லியன் அளவு ஆகும். நீங்கள் 1ம் வருட மருத்துவ பிரிவு மாணவி என்று கூறிப்பிட்டுள்ளீர்கள். உங்களிற்கு புரியும் என்று நம்புகின்றேன். தேவையற்ற குழப்பத்தை விடுங்கள்.

Facebook Comments

You may also like

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில்