அமைச்சர் ஆனார் முன்னாள் தீவிரவாதி

- in டாப் நியூஸ்
76
Comments Off on அமைச்சர் ஆனார் முன்னாள் தீவிரவாதி

கவுஹாத்தி : அசாம் மாநிலத்தில் மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில், காங்., முன்னாள் தலைவர் மற்றும், ‘மாஜி’ தீவிரவாதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில், பா.ஜ., – போடோ மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த, 2016ல் நடந்த தேர்தலில், 60 இடங்களைக் கைப்பற்றிய, பா.ஜ., அசாம் கனபரிஷத், போடோ மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்டு, கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு அமைச்சர்களிடம் இருந்த கேபினட் அந்தஸ்து குறைக்கப்பட்டு, இணை அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர்.

புதிய அமைச்சர்களாக, நான்கு பேர் நியமிக்கப்பட்டனர். போடோ மக்கள் முன்னணியைச் சேர்ந்த, சந்தன் பிரம்மா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர், போடோலாந்து அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அப்போது, அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, பல தாக்குதல்களையும் நடத்தியவர்.

மேலும், காங்., தலைவராக இருந்து, தற்போது, பா.ஜ.,வில் சேர்ந்துள்ள, சும் ரோங்ஹங்கிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அசாம் கனபரிஷத் கட்சியைச் சேர்ந்த, மூத்த தலைவர், பானி பூஷன் சவுத்ரி, பா.ஜ.,வைச் சேர்ந்த, சித்தார்த் பட்டாச்சார்யா ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்