அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண் செய்தியாளரிடம் செய்த செயல்: வைரல் காணொளி

- in டோன்ட் மிஸ்
277
Comments Off on அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண் செய்தியாளரிடம் செய்த செயல்: வைரல் காணொளி

அயர்லாந்து நாட்டின் பிரதமருடனான தொலைபேசி உரையாடலை பாதியில் நிறுத்தி விட்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடந்துகொண்டவிதம் தொடர்பான காணொளி, இணையத்தில் வைரலாகியுள்ளது.

அயர்லாந்து நாட்டின் பிரதமருடனான தொலைபேசி உரையாடலை பாதியில் நிறுத்தி விட்டு, அந்நாட்டு பெண் செய்தியாளரின் புன்னகையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டிய காணொளியே இவ்வாறு சமூக இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லியோ வரத்கருக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வாழ்த்தும் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனை பதிவு செய்வதற்காக வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டு பத்திரிகையாளர்களும் குழுமியிருந்தனர். அவர்களில் அயர்லாந்தின் ஆர்.டி.ஈ நியூஸ் பத்திரிக்கையின் அமெரிக்க தலைமை செய்தியாளர் கெய்த்திரியோனா பெர்ரியும் ஒருவர்.

லியோ வரத்கருடன் தொலைபேசி உரையாடலை ஆரம்பித்த ட்ரம்ப், வாழ்த்து தெரிவித்து சாதாரணாமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இருக்கின்றனர் என்று ட்ரம்ப், பிரதமர் லியோவிடம் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக பெரியை அதிபர் ட்ரம்ப் கைகாட்டி அவரது மேஜைக்கு அழைத்தார். அவர் எந்த பத்திரிக்கையைச் சேர்ந்தவர் என்பதைக் கேட்டுக் கொண்டவுடன், தொலைபேசியில் இருந்த லியோவிடம், இவரது சிரிப்பு மிகவும் அழகாக உள்ளது; உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்படுகிறது. பெரியும் அதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அவரிடம் கேட்ட பொழுது வினோதமான நிகழ்வு என்று கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.