அமெரிக்கா: கொள்ளையர்களால் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை

- in டாப் நியூஸ்
492
Comments Off on அமெரிக்கா: கொள்ளையர்களால் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை
சிகாகோ,
அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் அமைந்துள்ள சிறு நகரம் டால்டன். இங்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓரா என்பவர் எரிவாயு நிலையம்,  நடத்தி வருகிறார். அவருடைய மகன் அர்‌ஷத் ஓரா (வயது 19). இவர், டால்டனில் உள்ள கல்லூரியில் வணிகவியல் 2–ம் ஆண்டு படித்து வந்தார். தந்தை வெளியே செல்லும்போது இவர் எரிவாயு நிலையத்தை கவனித்துக் கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.30 மணி அளவில்  அர்‌ஷத் ஓராவும், அவருடைய உறவினர் பகர் சயீத்(55) என்பவரும் எரிவாயு நிலையத்தில் வழக்கம்போல் பணிகளை கவனித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அர்‌ஷத் ஓராவும், சயீத்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கொள்ளையன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து சரமாரியாக இருவர் மீதும் சுட்டான். இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். இதில், அர்ஷித் ஓரா பரிதாபமாக பலியானார்.சயீத் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி  வருகிறார்.
இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை ஆயுத கொள்ளை மற்றும் கொலை வழக்காக டால்டன் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அந்த பகுதிக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொலை மற்றும் கொள்ளைக்காரர்கள் பற்றி தகவல் தருவோருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7½ லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து உள்ளனர். சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. #ind

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்