அமித் மிஸ்ரா கைது

- in Sports
409
Comments Off on அமித் மிஸ்ரா கைது

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார்.
இதன்போது பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் பெண் தோழியை சந்தித்த போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அமித் மிஸ்ரா அவரை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் அசோக் நகர் பொலிஸ் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி அமித் மிஸ்ரா தன்னை பாலியல் ரீதியாக தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் அமித் மிஸ்ரா மீது இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 328 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இன்றைய தினம் அமித் மிஸ்ரா நீதிமன்றில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூரு பொலிஸ் முன் இன்று விசாரணைக்கு ஆஜரான அமித் மிஸ்ராவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிஸார் அவரை கைது செய்தனர். இருப்பினும், உடனடியாக அமித் மிஸ்ரா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Facebook Comments