அந்த மோடிவித்தை அறியாதவரா மோடி?: வைரமுத்து

- in Featured
107
Comments Off on அந்த மோடிவித்தை அறியாதவரா மோடி?: வைரமுத்து

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி மோடிவித்தை அறியாதவரா என கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். கறுப்பு பணத்தை ஒழிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தாரே ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று பலர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தான் கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் மோடி.

மோடியின் இந்த அதிரடியை அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சேர்த்து வைத்த சிறுவாடு(சேமிப்பு) எவ்வளவு என்பதை என்னிடம் சொல்லவில்லை என் அம்மா; மோடியிடம் சொல்லிவிட்டார். வரவேற்கிறேன். பிரதமரின் இந்தப் பெருமுடிவு இருள்மீது பாய்ச்சப்பட்ட ராட்சச வெளிச்சம்தான். ஆனால் லஞ்ச ஒழிப்பு என்ற விடியல் வந்தால்தான் மூடிய இருள் முற்றும் விலகும். அந்த மோடிவித்தை அறியாதவரா மோடி?

Facebook Comments

You may also like

காதலை பிரிக்க வேண்டுமா? கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்!

காதல் என்பது பிரிக்க முடியாத நட்பாகவும், நாளடைவில் உயிரையே கொடுக்கும்