அதிகாரிகளை ஆள் மாறாட்டம் செய்து துப்பாக்கிச்சூடு: தூத்துகுடி விவகாரம் குறித்து திமுக பகீர் குற்றச்சாட்டு

- in டாப் நியூஸ்
49
Comments Off on அதிகாரிகளை ஆள் மாறாட்டம் செய்து துப்பாக்கிச்சூடு: தூத்துகுடி விவகாரம் குறித்து திமுக பகீர் குற்றச்சாட்டு
தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கி சூடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலவித குற்றச்சாட்டுக்களை போலீசார் மீது கூறி வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் குறிபார்த்து ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தியவர்களை திட்டமிட்டு குறிபார்த்து சுட்டதாக உள்பட பல திடுக்கிடும் குற்றசாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்த பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேசிய உறுப்பினர்கள் போலீஸ் அதிகாரிகளை ஆள் மாறாட்டம் செய்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளனர்.
MK Stalin

ஆனால் துப்பாக்கிச்சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்று சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தூத்துகுடி விவகாரம் குறித்து பேச அனுமதி இல்லை என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும் என்று திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்