அணு ஆயுத பரிசோதனை தளங்களை வடகொரியா மே மாதத்தில் மூடும்; தென்கொரியா தகவல்

- in டாப் நியூஸ்
83
Comments Off on அணு ஆயுத பரிசோதனை தளங்களை வடகொரியா மே மாதத்தில் மூடும்; தென்கொரியா தகவல்
சியோல்,
வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர்.
அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் அன்னும், மூன் ஜே இன்னும் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றவும், கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணியாற்றவும் உறுதி கொண்டிருப்பதாக அறிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது வட-தென் கொரியாக்கள் இடையேயான உறவுகளை பலப்படுத்துதல், கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி காத்தல், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிடுதல் மற்றும் பரஸ்பர விஷயங்களில் இரு தரப்பினரும் நேர்மையாகவும், திறந்த மனதுடனும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் என தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அணு ஆயுத பரிசோதனை தளங்களை வடகொரியா மே மாதத்தில் மூடும் என அந்நாட்டின் தலைவர் கிம், தென்கொரிய அதிபர் மூன் ஜேயின்னிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மூன் அலுவலக செய்தி தொடர்பு அதிகாரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கடந்த வெள்ளி கிழமை நடந்த உச்சி மாநாட்டில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அடுத்த மாதத்தில் மூடப்படும் என கிம் கூறினார் என தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்