அணி அமைப்பதில் அவசரம் இல்லை: ராவ்

- in ஸ்மைல் ப்ளீஸ்
93
Comments Off on அணி அமைப்பதில் அவசரம் இல்லை: ராவ்

சென்னை: 3வது அணியா, 4வது அணியா என்பது கேள்வி அல்ல. ஒரு அணியாக மட்டுமே உருவெடுப்போம். அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.
சென்னை வந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

கூட்டணி முடிவு எப்போது

அப்போது ஸ்டாலின் கூறியதாவது: அரசியல் சூழ்நிலை குறித்தும், எதிர்கால அணுகுமுறைகள் குறித்தும் சந்திர சேகர ராவுடன் ஆலோசனை நடந்தது. மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்தும், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசினோம். இது முதல்கட்ட சந்திப்பு தான்.ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இது குறித்து பேச உள்ளேன். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மாற்றம் தேவை

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகயைில்;
எனது சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். மத்திய, மாநில அரசு உறவுகள், மாநில சுயாட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை பொது மக்களுக்கு வழங்குவதில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை. 2004ல் இங்கு வந்த போது, திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நிலவரம் குறித்து எனக்கு கற்பித்தார். தென் மாநிலங்களின் குரலாக ஒலிக்கும் கருணாநிதியை நினைத்து பெருமை. அவரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை சந்தித்த போது, புத்தகம் பரிசு வழங்கினார். அரசியலிலும், அரசிலும் மாற்றம் தேவை என நாடு முழுதும் விவாதம் எழுந்துள்ளது. அனைவரும் முடிவெடுக்க 3 மாதங்கள் தேவைப்படுகிறது. 3வது அணியா, 4வது அணியா என்பது கேள்வி அல்ல. ஒரு அணியாக மட்டுமே உருவெடுப்போம். அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை. இந்த சந்திப்பினை அரசியலாக்க வேண்டாம். தென் மாநிலங்களுக்கான உரிமையை பெறுவோம். அதில், பின்வாங்க போவதில்லை. இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதனை நோக்கியே எங்களது பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.