அஜித்தை எல்லோரும் கொண்டாடுவது எதனால்- அப்படி என்ன ஸ்பெஷல் அவரிடம்? மிஸ் பண்ணிடாதீங்க

- in Featured, சினிமா
165
Comments Off on அஜித்தை எல்லோரும் கொண்டாடுவது எதனால்- அப்படி என்ன ஸ்பெஷல் அவரிடம்? மிஸ் பண்ணிடாதீங்க

அஜித்… அஜித் என ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடுகிறார்கள். அவர் அப்படி, அவர் இப்படி எனநிறைய சொல்கிறார்கள். நல்ல விஷயங்களை யாரிடம் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

அவரின் குணங்கள் அப்படி என்ன என்று பலரும் வியக்கிறார்கள். இதன் எதிரொலியை சினிமாவிலும் பார்க்க முடிகிறதே எதனால் என ஏங்குவோரும் உண்டு.

வார்த்தைக்கு வார்த்தை தல… தல என்று கொண்டும் அஜித்தின் ரசிகர்கள் ஒரு புறமிருக்க, தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவரை பலருக்கு பிடித்திருக்கிறது. சினிமா பிரபலங்களும் இதை பற்றி ஓப்பனாக தெரிவித்து விடுகிறார்கள்.

தோற்றம் – மனதை பிரபலிக்குமா?

சினிமாவில் நடிக்க இன்றைக்கு திறமை வேண்டும் என்றாலும் பெரிய ஆளுடைய சிபாரிசு தேவைப்படுகிறது. ஆனால் அஜித்தின் தோற்றத்தை கண்டு வசியப்பட்டவர்களே ஏராளம். அதுபோலத்தான் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

இப்போதும் அப்படிதான் என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. பலருக்கும் இவரை பிடிப்பதற்கான கண்களில் இது ஒன்று!

வெளிப்படையான எண்ணம்!

சிலர் தம்மை சுற்றி என்ன நடத்தாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரோ இது பிடித்திருக்கிறது. இதை நான் விரும்பவில்லை. ஏன் இப்படி செய்ய வேண்டும் என மனதில் பட்டத்தை வெளிப்படையாக தயங்காமல் கேட்டுவிடுவாராம்.

ஏற்றத்தாழ்வின்மை

படப்பிடிப்பு தளங்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டாராம். பாரபட்சமின்றி அனைவரையும் சரிசமமாக நினைப்பாராம். எல்லோரிடமும் நன்றாக பேசுவாராம்.

இவர் மற்றவர்களை மதிப்பதை பார்த்து பல பேர் அதையே பின்பற்றுகிறார்கள். அவரோடு பணியாற்றியவர்கள் இதை எந்த தருணத்திலும் சொல்லாமல் இருக்க மாட்டார்களாம்.

மற்றவர்களை புரிந்து கொள்ளுதல்

தன்னுடன் இருக்கும் நண்பர்களின் தேவைகள், அவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளை பற்றி எல்லாவற்றையும் தாமாகவே தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் எதிர்பார்த்த உதவியை அவர்களுக்கு செய்வாராம்.

வீட்டில் பணிபுரியும் ஆட்களுக்கு சொந்தமாக வீட்டையும் கட்டிக்கொடுத்துள்ளாராம். போக்குவரத்துக்கு வாகன வசதியும் தந்திருக்கிறாராம்.

இதெல்லாம் பலரும் நேரத்தில் பார்த்து பகிர்ந்து கொண்ட உணர்வுகள். உங்களுக்கு தந்துள்ளோம் ரசிகர்களே.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி