அக்க்க்க்க்கா என பாசத்தோடு வந்த ஜுலியை அவமானப்படுத்திய நமீதா… பிக்பாஸ் டைட்டில் வின்னரும் இவர்கள் தானாம்!

- in சினிமா
257
Comments Off on அக்க்க்க்க்கா என பாசத்தோடு வந்த ஜுலியை அவமானப்படுத்திய நமீதா… பிக்பாஸ் டைட்டில் வின்னரும் இவர்கள் தானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி நடிகை நமீதாவை கட்டிப்பிக்க சென்றார். ஆனால் அதனை மறுத்த நமீதா ஜூலியை போய் உட்காரு என்றார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஆர்த்தி நேற்று வெளியேறினார். முன்னதாக ஜூலியின் பெட்டியையும் எடுத்துவரச் சொன்ன நடிகர் கமல்ஹாசன் வாசல்வரை வரவழைத்து டிவிஸ்ட்டு வைத்து மீண்டும் உள்ளே அனுப்பினார்.

வெளியேறப் போவதை அறிந்த ஜூலி சினேகன், ஆரவ், கணேஷ் என அனைவரையும் கட்டிப்பிடித்து கதறி அழுதார். பின்னர் மீண்டும் உள்ளே வந்த அவர், திரும்பவும் அனைவரையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வீட்டின் படுக்கையறைக்கு சென்ற அவர் அங்கிருந்த நமீதாவை கட்டிப்பிடிக்க சென்றார். அப்போது கட்டிப்பிடிக்க மறுத்த நமீதா, போம்மா, போய் உட்காரு என்றார். இதனால் ஜூலியின் முகம் சட்டென மாறியது.

இதைத்தொடர்ந்து பேசிய நமீதா எனக்கு நெருக்கமானவர்களைதான் நான் கட்டிப்பிடிபேன் என்றார். இதனை மக்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

மேலும் இன்று வெளிவந்த பிக் பாஸ் ப்ரொமோ காட்சியில் மக்களுக்கு நம்மையெல்லாம் பிடிக்காது. ஃபேக்கான(பொய்யான) ஆட்களைத் தான் பிடிக்கும் என்றும் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஜுலி, ஓவியா தான் வருவார்கள் என்று ரைசாவிடம் நமீதா கூறுவதாக வெளியாகியுள்ளது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி