அகிலேஷ்-மாயாவதி கூட்டணியை சமாளிக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புது திட்டம்

- in டாப் நியூஸ்
58
Comments Off on அகிலேஷ்-மாயாவதி கூட்டணியை சமாளிக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புது திட்டம்

க்னோ: உத்தரபிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 17 ஜாதிகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மாநில பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புது திட்டமாக இது கருதப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் கடந்த மாதம் மாநிலத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில், பகுஜன் சமாஜ் ஆதரவுடன் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி, இரண்டு தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

எனவே, புதிதாக அமைந்துள்ள சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணியை சமாளிக்க பாஜக ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டவர்களில் பட்டியலில் உள்ள 17 ஜாதிகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசு உத்தரபிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்கப்படும்பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் பாஜவின் செல்வாக்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த முயற்சியை சமாஜ்வாதி கட்சி, தான் ஆட்சியில் இருந்தபோது எடுத்தது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இத்திட்டம் நிறைவேறினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு குறைந்துவிடும் என அவர் கூறி வந்தார்.

பாஜ அரசின் இத்திட்டத்தால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், பாஜவுக்கு இதன் மூலம் முழுமையான அரசியல் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.  கஹார், காஷ்யாப், கேவாத், நிஷாத், பிந்த், பதாம் உள்ளிட்ட 17 பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த 14 ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது, உத்தரபிரதேச அரசின் இந்தக் கோரிக்கையை மத்திய பாஜ அரசு ஏற்றுக்கொள்ளும் எனக் கருதப்படுகிறது

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்